செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 25 அக்டோபர் 2021 (18:04 IST)

ஜெயில் படத்தைக் கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!

வசந்தபாலன் இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயில் திரைப்படம் கடந்த ஆண்டே முடிந்தும் இன்னும் ரிலிஸ் ஆகாமல் இருந்தது.

இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட திரைப்படம் வெயில். அதில் நாயகனாக ஜி வி பிரகாஷ் நடித்திருந்தார். சென்னை புறநகர் பகுதிகளான கண்ணம்மா நகர் மற்றும் செம்மஞ்சேரி ஆகிய பகுதிகளில் நடப்பது போல கதை உருவாக்கப்பட்டு இருந்தது.

படம் கடந்த ஆண்டே முழுவதும் முடிந்திருந்தாலும் ரிலீஸ் பற்றிய அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. இதனால் வசந்தபாலன் மற்றும் ஜி வி பிரகாஷ் ஆகியோர் தங்கள் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வந்தனர். இந்நிலையில் இப்போது தமிழின் முன்னணி நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் உலகெங்கும் இந்த படத்தை விநியோகம் செய்யும் உரிமையைக் கைப்பற்றியுள்ளது. விரைவில் ரிலிஸ் பற்றிய அறிவிப்புகள் வெளியாகும் என சொல்லப்படுகிறது.