1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: திங்கள், 26 செப்டம்பர் 2022 (14:28 IST)

அக்சயகுமாரின் ‘ராம்சேது’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அக்சயகுமாரின் ‘ராம்சேது’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!
அக்ஷய்குமார் நடிப்பில் உருவான ராம் சேது என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இராமேஸ்வரம் இலங்கை இடையே உள்ள ராம் சேது என்ற பாலம் ராமரால் கட்டப்பட்டது என்று நம்பப்படும் நிலையில் அதை வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது 
 
புராணத்தில் கூறப்படும் இந்த கதையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் நவீன காலத்தில் எடுக்கப்பட்ட கதையம்சம் போல் உள்ளது 
 
அக்ஷய்குமார் ஜோடியாக ஜாக்குலின் பெர்னாண்டஸ் நடித்துள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த படம் அக்டோபர் 25ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது