1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 1 செப்டம்பர் 2021 (16:27 IST)

யப்பா இதுக்கு அவங்களே பரவால்ல…அக்‌ஷரா ஹாசன் அலப்பறையால் கடுப்பான படக்குழு!

அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ஷாலினி பாண்டே. இவரை ’அக்னி சிறகுகள்’ என்ற படத்தில் நடிக்க தயாரிப்பாளர் டி.சிவா ஒப்பந்தம் செய்துள்ளார். படப்பிடிப்பு தொடங்கி சில நாட்கள் ஷூட்டிங்கில் நடித்து வந்தவர் திடீரென இந்தி பட வாய்ப்பு கிடைத்ததால் படத்திலிருந்து விலகியுள்ளார். மேலும் படக்குழுவினருக்கு அவர் கொடுத்த தொல்லைகள் தாங்காமல்தான் அவரை நீக்கியதாக்வும் சொல்லப்படுகிறது.

அவருக்கு பதிலாக நடிகை அக்‌ஷரா ஹாசன் அந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். ஆனால் இப்போது இவர் செய்யும் அலப்பறைகள் ஷாலினி பாண்டேவே பரவாயில்லையே என்று தோன்றும் அளவுக்கு உள்ளதாக படக்குழுவினர் புலம்பி வருகின்றனராம். எப்படியாவது படப்பிடிப்பை முடித்துவிட்டு அவரை அனுப்பினால் போதுமென திண்டாடி வருகின்றனராம்.