ஏஜெண்ட் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்… மிரட்டலான புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்!
அகில் நடிக்கும் ஏஜெண்ட் படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியுள்ளது.
நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் இப்போது தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கிறார். அவர் நடிப்பில் உருவாகும் புதிய படமான ஏஜெண்ட்டை சுரேந்தர் ரெட்டி இயக்குகிறார். அந்த படத்தில் ஒரு முக்கியமான வில்லன் வேடத்தில் நடிக்க மோகன் லால் மற்றும் கிச்சா சுதீப் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அவர்கள் மறுத்துவிடவே இப்போது மம்மூட்டியுடன் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அவரும் சம்மதித்து விட்டதாக சொல்லப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
இந்நிலையில் நேற்று படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியுள்ளது. இதை முன்னிட்டு நாயகன் அகில் மிரட்டலான தனது புகைப்படத்தையும் படத்தின் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்.