வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 24 ஜூன் 2021 (20:56 IST)

வாரிசு நடிகரின் படத்தில் வில்லனாகும் அரவிந்தசாமி!

பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மகன் அகில் நடிக்கும் திரைப்படத்தில் வில்லனாக நடிக்க அரவிந்த்சாமி ஒப்புக்கொண்டதாக வெளிவந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
நாகார்ஜுனாவின் மகன் அகில் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே சிரஞ்சீவி நடித்த சைரா நரசிம்ம ரெட்டி என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதிரடி ஆக்ஷன் கதை அம்சத்துடன் கூடிய இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்த படத்தில் கதாநாயகனை விட வில்லனுக்கு பவர்ஃபுல்லான கேரக்டர் என்பதால் இந்த கேரக்டரில் முக்கிய பிரபல நடிகர் நடித்தால்தான் பொருத்தமாக இருக்கும் என்று சுரேந்தர் ரெட்டி முடிவு செய்தார் 
இதனை அடுத்து அவர் அரவிந்த சாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அதற்கு அரவிந்த்சாமியும் ஒப்புக்கொண்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. தெலுங்கில் உருவாகும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது