வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: சனி, 17 ஜூன் 2017 (04:42 IST)

புதுசு புதுசா சாதனைகள் செய்ய அஜித்தால் மட்டுமே முடியும்: ரசிகர்கள் உற்சாகம்

தமிழ் திரையுலகில் அஜித் படம் செய்த சாதனைகள் சொல்லில் அடங்காது. அவரது ஒவ்வொரு படமும் வெளிவரும்போது இதற்கு முன் கேள்விப்பட்டிராத புதிய சாதனைகள் தோற்றுவிக்கப்படும். அந்த வகையில் தற்போது அஜித்தின் 'விவேகம்' புதிய சாதனை ஒன்றை செய்துள்ளது.



 


அஜித் நடித்த 'விவேகம்' கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகியது. சிக்ஸ்பேக் உடலமைப்புடன் அஜித்தின் இந்த தோற்றம் காண்போரை ஆச்சரியப்படுத்தியது. ஒருசிலர் இது போட்டோஷாப் என்று கூறினாலும் பின்னர் அது பொய் என்று நிரூபிக்கப்பட்டது.

இந்த நிலையில் இயக்குனர் சிவாவின் டுவிட்டர் பக்கத்தில் வெளியான 'விவேகம்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக், அதிக அளவு ரீடுவீட் செய்யப்பட்ட ஃபர்ஸ்ட்லுக் என்ற சாதனையை செய்துள்ளது.  இந்த பர்ஸ்ட் லுக்கை ரீ-டுவிட் செய்தவர்களின் எண்ணிக்கை 30,000 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதன் மூலம் முதல் முறையாக 30,000 ரீ-டுவிட்டுகளை தாண்டிய பர்ஸ்ட் லுக் விவேகம் என்ற பெருமையையும் சொந்தமாக்கியுள்ளது. இது தல ரசிகர்களை மேலும் உற்சாகம் அடைய செய்துள்ளது.