வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : வெள்ளி, 12 மே 2023 (17:14 IST)

உனக்கு எதுக்கு இந்த பொழப்பு...? IPL பிளாக் டிக்கெட் விற்று சர்ச்சையில் சிக்கிய விஜய் டிவி பிரபலம்!

விஜய் டிவியில் தனது திறமையை வெளிப்படுத்தி பிரபலமாகி முன்னேறியவர்களில் முக்கியமானவர் நாஞ்சில் விஜயன். அது இது எது, கலக்கப்போவது யாரு போன்ற காமெடி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆன இவர் லேடி கெட்டப் போட்டு நடித்தது தான் அனைவரிடமும் நல்ல ரீச் அடைந்தது. 
 
அவ்வப்போது நிறைய சர்ச்சைகளில் சிக்கும் இவர் டிக்டாக் பிரபலம் சூர்யா தேவி உடன் நெருக்கமாக இருந்தது சர்ச்சைக்குள்ளானது. இந்நிலையில் தற்போது ஐபிஎல் போட்டி டிக்கெட்டை பிளாக்கில் பல மடங்கு விலைக்கு விற்று பணம் சம்பாதித்ததாக சர்ச்சைகள் எழுந்துள்ளது. ரூ.1500 ரூபாய் டிக்கெட்டை அவர் ரூ.6500 ரூபாய்க்கு வாட்சப் மூலமாக விற்பனை செய்துள்ளது அம்பலமாகியுள்ளது.