செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 27 ஜூலை 2020 (20:34 IST)

உடல் எடை பாதியாக குறைத்து கட்டுமஸ்தான தோற்றத்தில் நடிகர் அஜித்!

தல அஜித் நடிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் 'வலிமை' படத்தில் நடித்து வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு ராமோஜிராவ் பிலிம்சிட்டி, சென்னை உள்பட ஒருசில இடங்களில் நடைபெற்றது.

இதற்கிடையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், அஜித்தின் பிறந்தநாளுக்கு ஏதுனும் அப்டேட் வெளிவரும் என காத்திருந்த தல ரசிகர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.  இதையடுத்து கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அரசல் புரசலாக இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்  2020 ஆம் ஆண்டு ஆயுத பூஜையை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி அஜித் ரசிகர்களை ஆனந்த கண்ணீரில் ஆழ்த்தியது.

இந்நிலையில் தற்ப்போது அஜித்தின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தில் அஜித் மிகவும் ஒல்லியாகி உடல் எடையை பாதியாக  குறைத்து ஸ்லிம் & பிட்டாக தோற்றம் அளிக்கிறார். இது எப்போது எடுக்கப்பட்ட புகைப்படமென்று தெரியவில்லை. ஆனால், இது நிச்சயம் வலிமை படத்தின் ஷட்டிங் போது எடுக்கப்பட்டதாக தான் இருக்கக்கூடும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.