1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வெள்ளி, 5 மே 2023 (16:02 IST)

தொந்தியும் தொப்பையுமாக வெளிவந்த புகைப்படம்... அஜித்தின் சினிமா கேரியர் இத்தோட காலி!'

அஜித்... தமிழ் சினிமா கண்ட தனித்துவமான கலைஞர்களில் ஒருவர். தனது திரைப்பயணத்தை  ‘அமராவதி’ படத்தில் தொடங்கி விடாமுயற்சி வரை தொடர்ந்து கொண்டிருக்கிறார். மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறார். 
 
இதனை அஜித்தின் வேர்ல்ட் டூர் டாகுமெண்ட்ரியாக எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.  அதை நிரூபிக்கும் வகையில் அஜித்தின் பைக் ட்ரிப் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. இந்நிலையில் நேபாளத்திற்கு சுற்று பயணம் சென்றுள்ள அஜித் அங்குள்ள மக்களுடன் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. 
 
அதில் அஜித் மிகவும் வயதான தோற்றத்தில் தொந்தியும் தொப்பையுமாக இருப்பதை பார்த்து நெட்டிசன்ஸ் கிண்டலடித்து உங்க சினிமா கேரியர் அவ்ளோதான். இத்தோட படங்களில் நடிக்கவேண்டாம் என விமர்சித்துள்ளனர்.