திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 1 ஜூன் 2019 (17:54 IST)

அஜித் வாங்கிய அசத்தல் கார்! இணையத்தில் மெகா வைரலாகும் புகைப்படம்!

தமிழ் சினிமா ரசிகர்களால்  தல என்று அழைக்கப்படும் அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார்  ஒரு கார் பிரியர் என்பதைவிட கார் வெறியர் என்றே கூறலாம். சினிமாவில் நடிக்கவருவதற்கு முன்பாக வெறித்தனமாக கார் ரேஸ் பந்தயங்களில் பங்கேற்றுள்ளார். 
 
அதனாலே அவர் நடிக்கும் பெரும்பாலான படங்களில் கார் மற்றும் பைக் ரேஸ் காட்சிகள் பட்டய கிளப்பி மாஸ் காட்டுவார்.  தான் ஒரு கார் பிரியர் என்பதாலே மார்க்கெட்டில் வரும் புதிய ரக கார்களை வாங்கும் பிரியமும் அவருக்கு அதிகம் இருக்கும். அதனாலே அடிக்கடி புது புது கார்களை வாங்கிவார்.  அந்த கார்களின் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி வைரலாகும். 


 
இந்த நிலையில் அஜித் ஒரு வெள்ளை நிற ஹோண்டா சிட்டி கார் ஒன்றை வாங்கியுள்ளாராம். அந்த காரின் புகைப்படங்கள் தற்போது தல ரசிகர்களால் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு சமூக வலைதளத்தில் படு வைரலாகி வருகிறது. ஆனால் இது அஜித் வாங்கியது இல்லை என்றும் சில செய்திகள் வருகிறது.