வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 28 மே 2019 (09:20 IST)

நேர்கொண்ட பார்வைக்குப் பிறகு அரசியல் களம் – அஜித் எடுத்த அதிரடி முடிவு !

நேர்கொண்ட பார்வை படத்திற்குப் படத்திற்குப் பிறகு அடுத்ததாக அஜித் அரசியல் படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அஜித் நடித்து முடித்துள்ள 'நேர் கொண்ட பார்வை' திரைப்படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு  வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதை அடுத்து அஜித் மீண்டும் இயக்குனர் ஹெச் வினோத்துக்கே வாய்ப்பு அளித்துள்ளார்.

இந்தப்படத்தின் பின் தயாரிப்புப் பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன. இந்த படத்தின் களம் அரசியலை மையமாகக் கொண்டு உருவாகி வருகிறதாம். சமூகப் போராளி ஒருவரின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப் படத்தை ஹெச் வினோத் உருவாக்கி வருவதாகவும் கூறப்படுகிறது.

வழக்கமாக அரசியல் விஷயங்களில் அதிகமாக ஆர்வம் இல்லாத அஜித் இந்த முறைத் தானே விருப்பப்பட்டு அரசியல் களம் கொண்ட படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.