திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 22 அக்டோபர் 2024 (14:07 IST)

கார் ரேஸில் கலந்துகொள்ளும் அஜித் அணியின் மற்ற வீரர்கள் அறிவிப்பு!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் தற்போது ‘விடாமுயற்சி’ மற்றும் ‘குட் பேட் அக்லி’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களை முடித்த பின்னர் அவர் சில ஆண்டுகள் சினிமாவில் இருந்து ஒரு இடைவெளி எடுத்துக் கொள்ள போவதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில்தான் அஜித் மீண்டும் கார் ரேஸ் போட்டியில் கலந்து கொள்ள போவதாக உறுதி செய்யப்பட்ட தகவல்லள் வெளியாகி வருகின்றன.  அவரின் சக நடிகர்கள் மற்றும் கார் ரேஸர் நரேன் கார்த்திகேயன் போன்றோர் இதற்காக அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அஜித்குமார் ரேஸிங் என்ற அஜித் அணியின் மற்ற உறுப்பினர்கள் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நிறுவனத்தின் உரிமையாளராகவும், முதன்மை ஓட்டுனராகவும் அஜித் செயல்பட,  ஃபேபியன் ட்யூபிக்ஸ், மேத்யூ டெய்ட்ரி மற்றும் கேம் மெக்லார்ட் ஆகியோர் மற்ற உறுப்பினர்களாக இணைந்துள்ளனர்.