திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 5 ஆகஸ்ட் 2022 (13:45 IST)

அஜித்துக்கு கடலுக்கு அடியில் பேனர்! – அசத்திய புதுச்சேரி அஜித் ரசிகர்கள்!

Ajithkumar
நடிகர் அஜித்தின் 30 ஆண்டு கால திரைப்பயணத்தை கொண்டாடும் வகையில் அஜித் ரசிகர்கள் கடலுக்கு அடியில் பேனர் வைத்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் அதிகமான ரசிகர்களை கொண்ட முன்னணி நடிகர்களில் முக்கியமானவராக இருப்பவர் நடிகர் அஜித் குமார். இவருக்கு தமிழகம் முழுவதும் லட்சக்கணக்காக உள்ள ரசிகர்கள் ஒவ்வொரு முறையும் படம் வெளியீட்டின்போது பேனர்கள் வைத்து கொண்டாடி வருகின்றனர்.

தனது ரசிகர் மன்றங்களை அஜித் கலைத்து விட்ட போதிலும் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ளார் அஜித்குமார். நேற்று அஜித்குமாரின் 30 ஆண்டு கால திரையுலக பயணம் கொண்டாடப்பட்டது. அஜித் ரசிகர்கள் பலரும் இதுகுறித்து சமூக வலைதளங்களில் தொடர்ந்து ட்ரெண்ட் செய்து வந்தனர்.

இந்நிலையில் அஜித்குமாரின் 30 ஆண்டு கால திரைப்பயணத்தை கொண்டாடும் விதமாக புதுச்சேரியை சேர்ந்த பிரெஞ்சுசிட்டி அஜித் ரசிகர்கள் கடலுக்கு அடியில் ஸ்கூபா டைவ் அடித்து சென்று அஜித்குமார் பேனரை வைத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.