வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 1 ஆகஸ்ட் 2024 (09:32 IST)

மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை… ஒரு வருடம் ஓய்வெடுக்கப் போகும் அஜித்?

அஜித், இப்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி மற்றும் ஆதிக் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ஆகிய திரைப்படங்களில்  நடித்து  வருகிறார். விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் சில மாதங்களாக லைகா நிறுவனத்தின் பொருளாதார பிரச்சனை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் மீண்டும் அஜர்பைஜானில் நடந்தது.

அஜித் தற்போது நடிக்கும் இந்த இரு படங்களையும் முடித்துவிட்டு ஒரு அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்னர் அஜித் ஒரு மைனர் அறுவை சிகிச்சை செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சினிமா பத்திரிக்கையாளர் அந்தணன் இதுபற்றி பேசும்போது “ஏற்கனவே செய்துகொண்ட அறுவை சிகிச்சையின் தொடர்ச்சியாக இன்னொரு அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளார். அதன் பிறகு அவர் ஒரு ஆண்டு சினிமாவுக்கு இடைவெளி விட்டுவிட்டு ஓய்வெடுக்கவுள்ளார்” என்று கூறியுள்ளார்.