புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 12 டிசம்பர் 2018 (20:21 IST)

தென்னாப்பிரிக்கா பந்துவீச்சாளரை அதிர வைத்த அஜித்-விஜய் ரசிகர்கள்

அஜித், விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் மோதிக்கொள்வது என்பது இன்று நேற்றல்ல., கடந்த பல வருடங்களாக நடந்து வரும் ஒரு தினசரி நிகழ்வு. இருதரப்பினர்களும் மோதிக்கொள்ளாமல் இருந்தால்தான் அது உலக அதிசயம்

இது நமக்கு பழகியதான், ஆனால் தென்னாப்பிரிக்கா பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயினுக்கு இது புதுசு. இவருடைய டுவிட்டர் பக்கத்தில் இன்று ஒரு அஜித் ரசிகர், நேற்று வெளியான 'விஸ்வாசம்' படத்தின் அடிச்சு தூக்கு பாடலின் ஸ்டில் ஒன்றை பதிவு செய்தார். இந்த ஸ்டில்லுக்கு அவருடைய டுவிட்டர் பக்கத்தின் கமெண்ட்டில் அஜித் ரசிகர்கள் லைக் செய்து வந்தனர். இது என்ன ஸ்டில் என்றே புரியாத ஸ்டெயின், 'இது என்ன? என்ன நடக்குது இங்கே' என்று கேட்க, உடனே அஜித் ரசிகர்கள் இதற்கு விளக்கம் அளித்து வந்தனர்.

இதை பார்த்த விஜய் ரசிகர்கள் சும்மா இருப்பார்களா? உடனே 'விஸ்வாசம்' ஸ்டில்லை மீம் செய்து அதே பக்கத்தில் வெளியிட்டனர். சாதாரணமாக தனது டுவீட் ஒன்றுக்கு சுமார் 50 கமெண்ட்டுக்களே வழக்கமாக வந்து கொண்டிருந்ததை பார்த்த ஸ்டெயினுக்கு ஆயிரக்கணக்கான கமெண்டுக்கள் வந்ததை பார்த்து ஆச்சரியம் அடைந்தார். அஜித், விஜய், விஸ்வாசம் என எதுவுமே புரியாத ஸ்டெயின் ஒருவழியாக 'இரவு வந்துவிட்டது கடையை சாத்துகிறேன்' என்று கூறிவிட்டு கிளம்பிவிட்டார். அவர் போய்விட்டாலும் அஜித், விஜய் ரசிகர்கள் இன்னும் அவருடைய பக்கத்தில் கமெண்டுக்களை பதிவு செய்து மோதி வருகின்றனர்.