1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 24 நவம்பர் 2023 (08:03 IST)

ரகசியமாக சென்னை திரும்பிய விடாமுயற்சி படக்குழு!

அஜித்தின் 62ஆவது படமான விடாமுயற்சி படத்தின் ஷுட்டிங் அஸர்பைஜானில் தற்போது நடந்து வருகிறது.  அஜித், திரிஷா உள்ளிட்டவர்கள் ஷூட்டிங்கில் கலந்துகொண்டுள்ளனர். இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்தபடத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னே வெளியாகி இருந்தாலும் கடந்த மாதம்தான் தொடங்கி தொடங்கி நடந்து வருகிறது.

இந்நிலையில் அஜர்பைஜானில் சமீபத்தில் இந்த படத்தின் ஒரு விறுவிறுப்பான கார் சேஸிங் சண்டைக்காட்சி ஒன்றை ஹாலிவுட் கலைஞர்கள் உதவியோடு படமாக்கி உள்ளாராம் இயக்குனர் மகிழ் திருமேனி.

இந்நிலையில் ஜனவரி இறுதிவரை அஜர்பைஜானில் நடக்க இருந்த விடாமுயற்சி ஷூட்டிங்கை திடீரென நிறுத்திவிட்டு இப்போது சென்னை திரும்பியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்கும் என தெரிகிறது.