1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 25 ஏப்ரல் 2024 (11:59 IST)

அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்குவதில் மீண்டும் சிக்கல்!

அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் ஷுட்டிங் அஸர்பைஜானில் சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது. அஜித், திரிஷா உள்ளிட்டவர்கள் ஷூட்டிங்கில் கலந்துகொண்டுள்ளனர். இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார்.  இந்த படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் நடந்து வந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் விடாமுயற்சி ஷூட்டிங்கின் போது நடந்த விபத்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தனர். அந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இந்நிலையில் இந்த வீடியோவை வைத்து விடாமுயற்சி தி பிரேக்டவுன் என்ற ஹாலிவுட் படத்தின் காப்பி என கருத்துகளை ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் 27 ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இப்போது அந்த தேதியிலும் ஷூட்டிங் தொடங்காது என்றும் அடுத்த மாதத்தில்தான் தொடங்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.