வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 19 ஜனவரி 2023 (15:20 IST)

இங்கிலாந்தில் அஜித் இன் ஆல்டைம் வசூல் ரெக்கார்ட் படைத்த துணிவு… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அஜித்தின் முந்தைய படங்களை விட துணிவு வெளிநாடுகளில் அதிக வசூல் சாதனை படைத்து வருகிறது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸ் ஆன துணிவு திரைப்படம் பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்றது. தமிழகத்தில் மிகப்பெரிய வசூல் செய்து வருகிறது. இந்நிலையில் இப்போது அமெரிக்காவிலும் இந்த படத்தின் வசூல் அதிகரித்துள்ளதாக படத்தை வெளியிட்ட சரிகம நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதையடுத்து இங்கிலாந்தில் இந்த படத்தை வெளியிட்ட போலைன் சினிமா இங்கிலாந்து 3 லட்சம் பவுண்ட் வசூலித்துள்ளதாக அறிவித்துள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 2.7 கோடி ரூபாய் ஆகும். அஜித்தின் படங்களிலேயே அதிக வசூல் செய்த படமாக துணிவு மாறியுள்ளது.