ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 4 டிசம்பர் 2022 (07:29 IST)

துணிவு படத்தின் அஜித்தின் ஸ்டைலான ஸ்டில் வெளியீடு!

அஜித் நடித்து வரும் துணிவு திரைப்படம் பொங்கல் ரிலீஸை ஒட்டி இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

அஜித்தின் 61வது படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் சிறிய பூஜையுடன் தொடங்கியது. ராமோஜி ராவ்  பிலிம் சிட்டியில் சென்னை அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு அதில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

இந்த படம் ஒரு வங்கிக் கொள்ளை சம்மந்தப்பட்ட படம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது வங்கி மாதிரி போடப்பட்ட செட்டில்தான் H வினோத் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளார். இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளனர்.

இப்போது ஷூட்டிங் பெரும்பாலும் முடிந்து கிட்டத்தட்ட இறுதிகட்ட பணிகள் நடந்து வருகின்றன. படத்தின் விநியோகப் பணிகளை தயாரிப்பாளர் தொடங்கிவிட்டார். இந்நிலையில் படத்தின் எந்த ஒரு பரமோஷன் பணிகளும் செய்யப்படாமல் இருந்த நிலையில், இப்போது கையில் துப்பாக்கியோடு அஜித் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.