1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 2 டிசம்பர் 2022 (09:27 IST)

அஜித்தின் துணிவு பட சில்லா சில்லா சிங்கிள் பாடல் ரிலீஸ் எப்போது? அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

துணிவு படத்தில் இடம்பெற்றுள்ள சில்லா சில்லா என்ற பாடல் டிசம்பர் 4 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித்தின் 61வது படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் சிறிய பூஜையுடன் தொடங்கியது. ராமோஜி ராவ்  பிலிம் சிட்டியில் சென்னை அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு அதில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

இந்த படம் ஒரு வங்கிக் கொள்ளை சம்மந்தப்பட்ட படம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது வங்கி மாதிரி போடப்பட்ட செட்டில்தான் H வினோத் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளார். இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளனர்.

இந்நிலையில் படத்தின் போஸ்டர் தவிர வேறு எந்த ஒரு அப்டேட்டையும் படக்குழு இன்னும் வெளிவரவில்லை. இந்நிலையில் படத்தில் இடம்பெற்ற ‘சில்லா சில்லா’ என்ற பாடல் டிசம்பர் 4 ஆம் தேதி வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.