அஜித்தின் மிரட்டும் பர்ஸ்ட் லுக்

Sasikala| Last Modified வியாழன், 2 பிப்ரவரி 2017 (10:14 IST)
சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படத்தின் பர்ஸ்ட் லுக்கை இன்று அதிகாலை 12.01 மணிக்கு வெளியிட்டனர். விவேகம்  என்று பெயர் வைத்திருக்கும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் ரசிகர்களை தெறிக்கவிட்டுள்ளது.

 
பொதுவாக படங்களில் சட்டை இல்லாமல் அஜித் நடிப்பதில்லை. இதில் சட்டையை கழற்றி தனது கட்டுமஸ்தான உடம்பை  காட்டியபடி இருக்கிறார். இந்த ஹைவோல்டேஜ் லுக் அப்படியே ரசிகர்களின் உச்சி முதல் பாதம்வரை பாய்கிறது. படம் நிச்சயம்  பம்பர்ஹிட் என்று இப்போதே பேச ஆரம்பித்துவிட்டனர்.
 
சிவா இயக்கத்தில் அஜித் நடித்த முதல் படம் வீரம். அடுத்து வேதாளம். இந்த வரிசையில் வியில் தொடங்கும் விவேகத்தை  தலைப்பாக்கியிருக்கிறார்கள்.
 
ஊருக்கே தலன்னாலும் சென்டிமெண்டை விடமுடியாதில்லையா.


இதில் மேலும் படிக்கவும் :