ஓடிடியில் ரிலீஸ் ஆகியும் 177 திரைகளில் துணிவு… வார இறுதியில் ஹவுஸ்புல்!
அஜித் நடிப்பில் உருவான துணிவு திரைப்படம் ஜனவரி 11 ஆம் தேதி ரிலீஸ் ஆனது.
சமீபத்தில் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான அஜித்தின் துணிவு திரைப்படம் நல்ல விமர்சனங்களையும் வசூலையும் பெற்று வெற்றிகரமாக ஓடி வருகிறது. அஜித் படங்களிலேயே மிக அதிகமாக வசூல் செய்த படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது. வங்கிக் கொள்ளை மற்றும் வங்கியில் நடக்கும் பண மோசடி தொடர்பான கதைக்களம் இளைஞர்களை பெரிய அளவில் ஈர்த்துள்ளது.
இதையடுத்து திரையரங்கில் வெளியாகி 28 நாட்கள் கடந்து நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பிப்ரவரி 8 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இதையடுத்து துணிவு திரைப்படம் இந்திய அளவில் நம்பர் 1 படமாகியுள்ளது. அதே போல துணிவு திரைப்படத்தின் மலையாளம் மற்றும் தெலுங்கு வெர்ஷனும் டாப் 10 ல் இடம்பிடித்துள்ளன.
இந்நிலையில் ஓடிடியில் ரிலீஸ் ஆன பின்னரும் இன்னமும் தமிழகத்தில் 177 திரைகளில் துணிவு படம் ஓடிக்கொண்டு உள்ளது. அதுமட்டும் இல்லாமல் வார இறுதி நாளான நேற்று கணிசமான திரைகளில் அரங்கு நிறைந்த காட்சிகளுமாக ஒடியுள்ளது. இது சம்மந்தமான ஸ்க்ரீன்ஷாட்களை அஜித் ரசிகர்கள் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.