1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha
Last Updated : திங்கள், 21 அக்டோபர் 2019 (19:27 IST)

பிரபல ஆர்.ஜே . வை நேரில் சந்தித்த அஜித் - வலிமை கெட்டப்பில் வைரலாகும் தல புகைப்படம்!

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவாகவும் ரசிகர்களின் கனவு நாயகனாகவும் வலம் வந்துகொண்டிருக்கும் நடிகர் அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் "வலிமை" என்ற புது படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் தான் இப்படத்தின் பூஜை போடப்பட்டது. 

 
அனைத்து ரசிகர்களுக்கும் பிடித்தமான ஹீரோவாக இருந்து வரும் அஜித்தின் நல்ல குணமும் , பந்தையில்லாத பண்பும் தான் அவரது வெற்றிக்கு காரணம். அதனாலே அவரை பலருக்கும் பிடிக்கும். ஆனால் படத்தை தவிர பொது நிகழ்ச்சிகளிலோ, விருது வழங்கும் விழாக்களிலோ, விளம்பர நிகழ்ச்சிகளிலோ எங்குமே பார்க்கமுடியாது. ஆனால், தப்பி தவறி அவர் வெளியில் செல்லும் போது விமான நிலையத்திலோ, ஓட்டளிக்க செல்லும் போதோ தான் ரசிகர்கள் கண்ணுக்கு அத்தி பூர்த்தாற்போல் தென்படுவார். 

அப்படி பார்த்தால் மட்டும் ரசிகர்கள் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள். இந்நிலையில் தற்போது தல அஜித்தின் தீவிர ரசிகையான பிரபல ஆர்.ஜெ ஜே. சுலபா எதிர்பாராத விதமாக தல அஜித்தை சந்தித்துள்ளார். மிகுந்த சந்தோஷத்தில் அஜித்திடம் ஒரு செல்பி எடுத்துக் கொள்ளலாமா சார் என்று கேட்டாராம். உடனே அஜித் அவரது செல்போனை வாங்கி செல்ஃபி எடுத்துள்ளார்.
 
அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ஆர்.ஜே சுலபா, அஜித்தின் குணாதிசயங்கள் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதே நேரத்தில், ஒரு உன்னதமான, நியாயமான மனிதருக்கு இலக்கணம் என்று பார்த்தால் அது  “தல அஜித்” தான் என்று நெகிழ்ச்சியுடன் கூறியிருந்தார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.