வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 20 மார்ச் 2020 (08:18 IST)

அஜித்தால் உடல் எடையைக் குறைக்க முடியவில்லை - படம் பிளாப் ஆனது குறித்து இயக்குனர் கருத்து !

இயக்குனர் லிங்குசாமி தன் இயக்கத்தில் அஜித் நடித்த ஜி திரைப்படம் தோல்வி அடைந்தது குறித்து அவர் சமீபத்தில் அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

கடந்த 2005 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஜி. லிங்குசாமியின் முந்தைய இரு படங்களான ஆனந்தம் மற்றும் ரன் ஆகிய இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்று இருந்ததால் ஜி படம் எதிர்பார்ப்போடு வெளியானது. ஆனால் படம் தோல்வி அடைந்தது.

இது சம்மந்தமாக லிங்குசாமி அளித்த நேர்காணலில் ‘முதலில் இந்த கதை அஜித்துக்காக உருவாக்கப்படவில்லை. ஆனால் அஜித் என்னிடம் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நான் நடிக்கிறேன் எனக் கூறினார், அப்போதே அவரிடம் நான் கல்லூரி மாணவன் போல எடையை குறைக்கவேண்டும். மற்றும் கிளைமாக்ஸுக்காக ஒரிஜினலாக தாடி வளர்க்கவேண்டும் என கூறினேன். அவரால் இரண்டையும் செய்ய முடியவில்லை. ஆனால் என்னை நம்பி முழுவதுமாக தன்னை ஒப்படைத்தார். அதற்கு முன்னால் ரன் படத்தின் வெற்றியின் தலைக்கணமோ என்னவோ தெரியவில்லை… அந்த படம் சரியாகப் போகவில்லை.’ எனத் தெரிவித்துள்ளார்.