செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 11 அக்டோபர் 2024 (15:40 IST)

பொங்கல் ரிலீஸில் இருந்து பின் வாங்கும் அஜித்தின் குட் பேட் அக்லி… பின்னணி என்ன?

சமீபகாலமாக ஒவ்வொரு படத்துக்கும் இடையே இடைவெளி எடுத்துக்கொண்ட அஜித் தற்போது ஒரே நேரத்தில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.  இதில் விடாமுயற்சி ஷூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில் குட் பேட் அக்லி ஷுட்டிங் இரண்டு கட்டங்கள் நடந்து முடிந்துள்ளது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா மற்றும் த்ரிஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

முதல் கட்ட ஷூட்டிங் ஐதராபாத்தில் நடந்த நிலையில் இப்போது அடுத்த கட்ட ஷூட் ஸ்பெயினில் தொடங்கியுள்ளது. அதற்காக படக்குழு மொத்தமும்  ஸ்பெயினில் முகாமிட்டுள்ளது. இந்த படம் முதலில் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸாகும் என அறிவிக்கப்ப்பட்டிருந்தது. ஆனால் இப்போது ஏப்ரல் மாதத்துக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் இந்த படத்தின் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் பிஸ்னஸ் இன்னும் வியாபாரம் ஆகவில்லை என சொல்லப்படுகிறது. அதனால் விடாமுயற்சி படம் பொங்கலுக்கு ரிலீஸாக வாய்ப்பு அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது.