1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 11 அக்டோபர் 2024 (10:21 IST)

சாக்லேட் பாய் லுக்கில் அஜித்… இணையத்தைக் கலக்கும் GBU லுக்!

சமீபகாலமாக ஒவ்வொரு படத்துக்கும் இடையே இடைவெளி எடுத்துக்கொண்ட அஜித் தற்போது ஒரே நேரத்தில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.  இதில் விடாமுயற்சி ஷூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில் குட் பேட் அக்லி ஷுட்டிங் இரண்டு கட்டங்கள் நடந்து முடிந்துள்ளது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா மற்றும் த்ரிஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

முதல் கட்ட ஷூட்டிங் ஐதராபாத்தில் நடந்த நிலையில் இப்போது அடுத்த கட்ட ஷூட் ஸ்பெயினில் தொடங்கியுள்ளது. அதற்காக படக்குழு மொத்தமும்  ஸ்பெயினில் முகாமிட்டுள்ளது. ஸ்பெயினில் நடக்கும் ஷூட்டிங்கில் அஜித் நடித்து வரும் நிலையிl அந்த படத்துக்காகக் கையில் டாட்டூ, ஹேர்ஸ்டைலில் மாற்றம் அஜித் இளமையான தோற்றத்தில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.