திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 29 ஜனவரி 2021 (23:48 IST)

பெண் போலீஸ் வாகனத்தில் பயணம் செய்த அனுஷ்கா !வைரல் புகைப்படம்

தென்னிந்திய  சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் அனுஷ்கா ஷெட்டி. இவர் இன்று பெண் போலீஸ் வாகனத்தில் செல்லும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

அருந்ததி, ருத்ரமாதேவி, பாகுபலி-1,2 ஆகிய படங்களில் நடுத்தவர் அனுஷ்கா ஷெட்டி. இவர் தற்போது முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இன்று ஐதராபாத் நகரில் பெண் போலீஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது.  அதில் 750 க்கும் மேற்பட்ட பெண் போலீஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அப்பொது பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் நடிகை அனுஷ்கா ஷெட்டி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

இந்நிகழ்ச்சி முடிந்த பின்னர் அனுஷ்கா ஷெட்டி பெண் போலிஸ் அதிகாரியின் காரின் அமர்ந்து சிறிது தூரம் சென்றார். இதுகுறித்த புகைப்படங்கள்வைரலாகி வருகிறது.

மேலும், மாநாட்டில் அனுஷ்கா பேசும்போது, சினிமாவின் நடிக்கும் எங்களைக் காட்டிலும் பெண் போலீஸ் அதிகாரிகள்தான் உண்மையான நட்சத்திரங்கள் எனத் தெரிவித்துள்ளார்.