1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: சனி, 2 ஜனவரி 2021 (18:25 IST)

அடப்பாவிகளா! ‘வலிமை’ அப்டேட்டை முதல்வரிடம் கேட்ட அஜித் ரசிகர்கள்

அஜித் நடித்து வரும் ‘வலிமை’ திரைப்படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியானது என்பதும் அதன் பிறகு அந்த படம் குறித்த ஒரு சிறு அறிவிப்பை கூட படக்குழுவினர் வெளியிட வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது
 
‘வலிமை’ படம் குறித்த அதிகாரபூர்வமற்ற தகவல்கள் பல வெளிவந்து கொண்டிருந்தாலும் பல ஸ்டில்கள் கசிந்து வந்தாலும் படக்குழுவினர் தரப்பில் இருந்து ஒரு அப்டேட் கூட இல்லையே என்ற ஆதங்கம் அஜித் ரசிகர்கள் மத்தியில் உள்ளது 
 
இதனை அடுத்து போனி கபூர் மற்றும் வினோத் ஆகிய இருவருக்கும் அஜித் ரசிகர்களின் கண்டனங்களை குவித்து வருகின்றனர். இதனை அடுத்து அஜீத் மேனேஜர் சமீபத்தில் ரசிகர்களை சாந்தப்படுத்த அறிக்கை ஒன்றை வெளியிட்டார் 
 
இந்த நிலையில் ‘வலிமை’ அப்டேட்டை யாரிடம் கேட்க வேண்டும் என்ற வரைமுறை இல்லாமல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் அஜித் ரசிகர்கள் கேட்ட வீடியோ வைரலாகி வருகிறது. சமீபத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்கு காரில் சென்று கொண்டிருந்த முதல்வரிடம் திடீரென அஜித் ரசிகர் ஒருவர் ‘வலிமை’ அப்டேட் எப்போது வரும்? என்று கேட்ட வீடியோ டிவிட்டர் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது 
 
இதனை அடுத்து நெட்டிசன்கள் அடப்பாவிகளா யாரிடம் ‘வலிமை’ கேட்பது என்ற வரைமுறையை இல்லையா என்று கமென்ட் அடித்து வருகின்றனர்