ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 16 ஆகஸ்ட் 2023 (14:53 IST)

அஜித் யாரு என்று கேட்ட அமைச்சர் துரைமுருகன்.. வச்சு செய்யும் அஜித் ரசிகர்கள்.

அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டி ஒன்றில் அஜித் யார் என்று கேட்டதை அடுத்து அஜித் ரசிகர்கள் அவரை சமூக வலைதளத்தில் வச்சு செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
அமைச்சர் துரைமுருகன் அளித்த பழைய பேட்டி ஒன்றில் அஜித் விஜய் நடிப்பு குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று செய்தியாளர் கேட்டார். அப்போது அஜித் என்றால் யார் என்று அமைச்சர் துரைமுருகன் கேட்க இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 
 
இதற்கு அஜித் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். பாச தலைவனுக்கு பாராட்டு விழா நடத்திய போது அஜித் பேசிய வீடியோவை இணையத்தில் வைரல் ஆக்கி வருகின்றனர். 
 
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையிலேயே பாச தலைவனுக்கு பாராட்டு விழாவில் கலந்து கொள்ள கட்டாயப்படுத்துகிறார்கள் என திமுகவினர் மீது  அஜித் குற்றம் சாட்டினார். 
 
அதற்கு ரஜினியும் எழுந்து நின்று கைதட்டினார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்த வீடியோவை  வைரல் ஆக்கி வரும் அஜித் ரசிகர்கள் அஜித் யார் என்று இப்போது தெரிகிறதா என பதிவு செய்து வருகின்றனர்.
 
 
 
Edited by Mahendran