திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 27 ஏப்ரல் 2019 (12:00 IST)

மே 19-க்குள் வேலூரில் தேர்தல் – தேர்தல் ஆணையத்தில் திமுக மனு !

வேலூரில் தேர்தலை மே 19 ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும் திமுக சார்பில் தேர்தல ஆணையத்தில் மனுக் கொடுக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வீடுகளில் நடைபெற்ற சோதனைகளில் 10 கோடிக்கும் மேல் பணம் கைப்பற்றப்பட்டதால் தேர்தலை நிறுத்தப் பரிந்துரை செய்தது தேர்தல் ஆணையம். ஆவணங்களைக் குடியரசுத்தலைவருக்கு அனுப்பி அவரின் ஒப்புதலின் பேரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சியின் தலைவர் ஏ சி சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். மனுவில் அவர் ’பணம் கொடுக்க முயன்ற வேட்பாளரை தகுதிநீக்கம் செய்யாமல் தேர்தலை ரத்து செய்திருப்பது முறையானது அல்ல’ எனக் கூறியிருந்தார்.ஆனால் தேர்தல் ரத்து சரியானதுதான் எனக் கூறி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்நிலையில் வேலூர் தொகுதிக்கான தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் ஏ சி சண்முகம் தலைமை தேர்தல் ஆணையத்திடம் சில தினங்களுக்கு முன் மனுக் கொடுத்துள்ளார். அதை அடுத்து இப்போது திமுகவும் தேர்தல் ஆணையத்தை நாடியுள்ளது. தலைமைத் தேர்தல் அதிகாரி சுனில் அரோராவை சந்தித்த திமுக தலைவர்களான திருச்சி சிவா, ஆர்.எஸ்.பாரதி, வேட்பாளர் கதிர் ஆனந்த் ஆகியோர் சந்தித்து தேர்தலை மே 19 ஆம் தேதிக்குள்  நடத்த வேண்டுமென மனு அளித்திருக்கிறார்கள்.