1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 28 ஜனவரி 2023 (08:24 IST)

அட்லி இயகத்தில் அஜித்தா?... யார் பார்த்த வேல இது?

நேற்று முழுவதும் சமூகவலைதளங்களில் அட்லி இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வந்தன.

அட்லி வரிசையாக ஹிட் படங்களைக் கொடுத்து இப்போது பாலிவுட்டில் ஷாருக் கான் நடிக்கும் ‘ஜவான்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை முடித்ததும், அவர் மீண்டும் விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் நேற்று முழுவதும் சமூகவலைதளங்களில் அட்லி, அஜித்தின் 63 ஆவது படத்தை இயக்க உள்ளதாகவும், இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளதாகவும் தகவல்கள் பரவின. ஆனால் அந்த தகவலில் ஒரு சதவீதம் கூட உண்மை இல்லை என இப்போது சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.