பாராட்டுகளைப் பெற்று வரும் பிகினிங் திரைப்படம்!
லிங்குசாமி வெளியீட்டில் வெளியான பிகினிங் திரைப்படம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
திரையை இரண்டாக பிரித்து ஸ்பிலிட் ஸ்கிரீன் எனும் உத்தி மூலம் இரண்டு கதைகளை சொல்லும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள பிகினிங் திரைப்படம் அதன் கதை சொல்லும் உத்திக்காகவே கவனிக்கப்பட்டது. இதையடுத்து இந்த படத்தை பிரபல இயக்குனர் லிங்குசாமி தமிழ்நாட்டில் வெளியிட்டுள்ளார்.
இதையடுத்து இந்த படம் இப்போது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. மேலும் இந்த படத்தில் நடித்துள்ள வினோத் கிஷானின் நடிப்பு பாராட்டுகளைக் குவித்துள்ளது.