வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 9 ஜூலை 2024 (08:13 IST)

மீண்டும் அஸர்பைஜான் சென்ற அஜித்… விடாமுயற்சி ஷூட்டிங் அப்டேட்!

அஜித், இப்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி மற்றும் ஆதிக் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ஆகிய திரைப்படங்களில்  நடித்து  வருகிறார். விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களாக லைகா நிறுவனத்தின் பொருளாதார பிரச்சனை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் ஜூன் 20 ஆம் தேதி மீண்டும் அஸர்பைஜானில் தொடங்கியது.

அங்கு சில ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் இப்போது அஜித் மற்றும் த்ரிஷா ஆகியோர் சென்னைக்குத் திரும்பிவிட்டனர். அங்கு இப்போது மகிழ் திருமேனி மற்ற நடிகர்களை வைத்து வேறு சில காட்சிகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் இன்னும் சில நாட்களில் அங்கிருந்து கிளம்பி ஐதராபாத்தில் செட் அமைத்து மீதமுள்ளக் காட்சிகளை படமாக்க உள்ளார்களாம்.

இந்நிலையில் அஜர்பைஜானில் இன்னும் அஜித் நடிக்க வேண்டிய காட்சிகளுக்காக நேற்று மீண்டும் அங்கு சென்றுள்ளார். அங்கும் இன்னும் 12 நாட்கள் மட்டும் ஷூட்டிங் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அதன் பின்னர் படக்குழு ஐதராபாத்துக்கு திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.