திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 20 ஆகஸ்ட் 2020 (08:21 IST)

பச்சை குத்திய நடிகரை லெப்ட் அண்ட் ரைட் விட்ட அஜித்!

தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகராக ஜொலித்துக்கொண்டிருக்கும் அஜித்திற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது.இவர் சினிமாவில் நடிப்பதோடு சரி வேற எந்த பொது நிகழ்ச்சிகளிலோ , விருது விழாக்களிலோ பங்கேற்ப்பது கிடையாது.

இதனாலே அஜித்தை வெளியில் எங்கு பார்த்தாலும் ரசிகர்கள் மெசிலிர்த்து விடுவார்கள். இந்நிலையில் அஜித்தின் தீவிர ரசிகரான சீரியல் நடிகர் ஜெமினி அஜித் குறித்து பேட்டியில் பேசியுள்ளார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் தனது கையில் அஜித்தின் பெயரை பச்சை குத்தியிருப்பதை கிரீடம் ஷூட்டிங் ஸ்பாட்டில் பார்த்த தல அவரை கண்டித்தாராம்.

மேலும், எதுக்கு இப்படி பண்ணீங்க..? உங்க லைஃப்ல நான் என்ன பண்ணேன்..? இப்படி செய்வது தவறு உடனடியாக வலியில்லாமல் மருந்துகளை எடுத்துக்கொண்டு இதை அழித்து விடுங்கள் என அறிவுரை கூறினாராம். அத்துடன், எல்லாரும் இப்படிதான் பண்றாங்க எனக்கு இதெல்லாம் சுத்தமா பிடிக்கல... திரையில் பார்த்து ரசிப்பதோடு நிறுத்திக்கொள்ளுங்கள் என காட்டமாக கூறினாராம்.