1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 3 ஜனவரி 2024 (07:18 IST)

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில் அஜித்துக்கு இவ்வளவு சம்பளமா?

அஜித் இப்போது தன்னுடைய 62ஆவது படமான விடாமுயற்சி படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தின் ஷுட்டிங் அஸர்பைஜானில் நடந்து வருகிறது.  இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்தபடத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னே வெளியாகி இருந்தாலும் ஷூட்டிங் இப்போதுதான் அஜர்பைஜானில் தொடங்கியுள்ளது.

இதையடுத்து அஜித் நடிக்கும் அடுத்த படத்தை இளம் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் அவர் இயக்கிய மார்க் ஆண்டனி திரைப்படம் வெற்றிபெற்று 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருந்த நிலையில் இப்போது அஜித்தின் சம்பளம் இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில் அஜித்துக்கு 163 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்பணமாக 25 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.