1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 16 ஜனவரி 2023 (14:12 IST)

ஷூட்டிங்குக்கு முன்பே அஜித் 62 பட ஓடிடி உரிமையை கைப்பற்றிய பிரபல ஓடிடி!

துணிவு படத்தின் ரிலீஸுக்கு முன்னதாகவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் அடுத்து நடிக்க உள்ள அஜித் 62 ஆவது படத்தின் அறிவிப்பு வெளியாகி ரசிகர்களுக்கு டபுள் டிரீட்டாக அமைந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் வெளியான அப்டேட்டின்படி ‘அஜித்தின் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்த படம் ஜனவரி இறுதியில் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இப்போது அவரை நீக்கிவிட்டதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் பூஜை தொடங்குவதற்கு முன்பாகவே இந்த படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. திரையரங்க ரிலீஸுக்கு பின்னர் நெட்பிளிக்ஸில் இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகும்.