1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வியாழன், 10 நவம்பர் 2022 (11:20 IST)

லைகா தயாரிக்கும் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்: யார் ஹீரோ?

lyca
பிரபல தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இருக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகும் என்று என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன் அந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது
 
 லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் அடுத்த படத்தின் டைட்டில் ’பட்டத்து அரசன்’. இந்த படத்தில் அதர்வா மற்றும் ராஜ்கிரண் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்
 
மேலும் இந்த படத்தில் நாயகியாக ஆசிகா ரங்கநாத் மற்றும் ராதிகா நடிக்க உள்ளனர். இந்த படத்தை பிரபல இயக்குனர் சற்குணம் இயக்கி உள்ளார். ஜிப்ரான் இசையில் லோகநாதன் ஒளிப்பதிவில் ராஜா படத்தில் கனல்கண்ணன் சண்டை பயிற்சியில் இந்த படம் உருவாகி உள்ளது 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் விரைவில் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதர்வா மற்றும் ராஜ்கிரணின் அட்டகாசமாக இருக்கும் இந்த போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

pattathu arasan
 
Edited by Siva