திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 3 பிப்ரவரி 2023 (15:36 IST)

அஜித் பட லிஸ்ட்டில் விஷ்ணுவர்தன் இடம்பெறாதது ஏன்?- ஓ இதுதான் காரணமா?

அஜித் 62 படத்தை இயக்க இருந்த விக்னேஷ் சிவன் சில காரணங்களால் நீக்கப்பட்டுள்ளார்.

அஜித்தின் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது விக்னேஷ் சிவன் படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து உடனடியாக படம் இயக்க தயாராக உள்ள இயக்குனர்கள் சிலரை அஜித் மற்றும் லைகா தரப்பு தொடர்பு கொண்டதாக சொல்லப்படுகிறது. அதில் ஒருவராக இயக்குனர் விஷ்ணுவர்தனும் இருந்துள்ளார். ஆனால் அவர் ஏற்கனவே இரண்டு படங்களை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாலும், அஜித் படத்தை இயக்க மிகப்பெரிய சம்பளம் கேட்டதாலும்தான் அவர் இடம்பெறவில்லை என்று சொல்லப்படுகிறது.