வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 21 நவம்பர் 2018 (21:05 IST)

'2.0' படத்தில் சிறப்பு வேடத்தில் ஐஸ்வர்யாராய்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' திரைப்படம் வரும் 29ஆம் தேதி உலக அளவில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த படத்தின் புரமோஷன் உலகம் முழுவதும் நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் எதிர்பார்ப்பு உச்சத்திற்கு சென்றுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தில் 'எந்திரன்' படத்தில் 'சனா' கேரக்டரில் நாயகியாக நடித்த ஐஸ்வர்யாராய் சிறப்பு தோற்றத்தில் அதே சனா கேரக்டரில் நடித்திருப்பதாகவும், இதுவரை இந்த தகவலை ரகசியமாக வைத்திருந்த படக்குழு தற்போது இந்த செய்தியை கசியவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் ஐஸ்வர்யாராய் '2.0' படத்திற்காக ஒருநாள் கூட கால்ஷீட் கொடுக்கவில்லை என்றும், 'எந்திரன்' படத்தில் நீளம் காரணமாக வெட்டப்பட்ட ஐஸ்வர்யாராயின் காட்சிகள் இந்த படத்தில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் சிலர் கூறி வருகின்றனர்.

'2.0' திரைப்படம் ரிலீசாக இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருப்பதால் அதுவரை பொறுத்திருந்து இந்த செய்திகள் எந்த அளவுக்கு உண்மை என்பதை பார்ப்போம்