எனது மகளின் மிகச்சிறந்த ஆசிரியை இவர்தான்: அபிஷேக் பச்சன் பெருமிதம்
எனது மகளின் மிகச் சிறந்த ஆசிரியை இவர்தான் என தனது மனைவி ஐஸ்வர்யா ராய் குறித்து நடிகர் அபிஷேக் பச்சன் கூறியிருப்பது ஆச்சரியத்தை அளித்துள்ளது.
சமீபத்தில் அளித்த பேட்டியில் உங்கள் மகள் படிப்புக்கு உதவுவீர்களா என கேள்வி கேட்டபோது அபிஷேக்பச்சன் பதில் கூறியதாவது:
எனது மகளின் படிப்பை எனது மனைவி ஐஸ்வர்யா தான் பார்த்துக் கொள்வார். அவர் ஒரு மிகச் சிறந்த ஆசிரியை. எனது மகளுக்கு உலகின் மிகச் சிறந்த ஆசிரியை எனது மனைவி ஐஸ்வர்யா தான். அவர் கணிதத்தில் மிகச் சிறந்தவர் ஆகையால் நான் அந்த பக்கம் போகவே மாட்டேன். அவரே அனைத்தையும் கவனித்துக் கொள்கிறார் என்று கூறியுள்ளார். அபிஷேக் பச்சனின் இந்த பதில் ஆச்சரியத்தை அளித்துள்ளது