வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 4 டிசம்பர் 2021 (11:17 IST)

என் மகளை கேலி செய்தால் பொறுத்துக் கொள்ள முடியாது… அபிஷேக் பச்சன் கோபம்!

நடிகர் அபிஷேக் பச்சனின் மகளை கேலி செய்யும் விதமாக சமூகவலைதளங்களில் பதிவுகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகின.

நடிகர் அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் தம்பதிகளுக்கு ஆராத்யா பச்சன் என்ற மகள் உள்ளார். அவரிம் 10ஆவது பிறந்தநாளை மாலத்தீவில் சிறப்பாக கொண்டாடினர். அந்த புகைப்படங்களை அபிஷேக் பச்சன் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அப்போது சிலர் ஆராத்யாவை மோசமாக விமர்சிக்கும் சில கமெண்ட்களை பதிவு செய்தனர்.

இதுகுறித்து இப்போது பேசியுள்ள அபிஷேக் பச்சன் ‘நான் ஒரு நடிகன் என்பதால் என்னுடைய நடிப்பு பற்றி விமர்சனங்கள் வந்தால் அதை ஏற்று மாற்றிக்கொள்வேன். ஆனால் என்னுடைய மகளை கேலி செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படி செய்பவர்கள் என் முகத்துக்கு நேராக செய்யட்டும்’ எனக் கூறியுள்ளார்.