வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: புதன், 27 மார்ச் 2019 (13:03 IST)

ஷூட்டிங் ஸ்பாட்டில் இயக்குநருடன் சண்டைக்குப் போன பிக்பாஸ் ஐஸ்வர்யா!

பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா, அலேகா ஷூட்டிங் ஸ்பாட்டில் இயக்குநருடன் சண்டைக்குப் போனது சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 
 

 
பாயும் புலி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் சத்ரியன் உள்ளிட்ட படங்களில் நடித்த ஐஸ்வர்யா தத்தா, பிக்பாஸ் நிகழ்ச்சியால் பிரபலமானார். அவரது வசம் கெட்டவன்னு பேரு எடுத்த நல்லவன்டா, அலேகா, கன்னித்தீவு உள்ளிட்ட படங்கள் கைவசம் இருக்கின்றன.  
 
ஆரியுடன் இவர் ஜோடியாக நடிக்கும் `அலேகா’ படத்தை புதுமுக இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமித்திரன் இயக்குகிறார். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதுகுறித்து விளக்கம் அளிக்கும் சூழல் படக்குழுவுக்கு ஏற்பட்டது. படத்தின் பெரும்பான்மையான போர்ஷன்களின் ஷூட்டிங் முடிந்தநிலையில், இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்துவருகிறது. அந்தவகையில் மேடவாக்கத்தில் நடைபெற்ற ஷூட்டிங்கின்போது இயக்குநர் ராஜமித்திரனுடன் ஐஸ்வர்யாவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது. வாக்குவாதம் முற்றி இயக்குநருடன் ஐஸ்வரியா சண்டைக்கே போய்விட்டாராம். இதனால், அங்கு சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.