ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 5 ஜூலை 2021 (16:47 IST)

ஐஸ்வர்யா ராஜேஷின் திட்டம் இரண்டு… ஓடிடியில் வெளியீடு!

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திட்டம் இரண்டு திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மினி ஸ்டூடியோ மற்றும் சிக்ஸர் என்டர்டைன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் பிளான் பி. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி தனது டுவிட்டர் வெளியிட்டார்.

படத்துக்குப் பின்னர் பெயர் ’திட்டம் இரண்டு’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கும் இந்த படத்திற்கு சதீஷ் ரகுநாதன் இசையமைத்துள்ளார். கோகுல் பினாய் ஒளிப்பதிவில், பிரேம்குமார் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சஸ்பென்ஸ் மற்றும் திகில் கதையம்சம் கொண்ட இந்த படத்தின் எதிர்பார்ப்பு எழுந்திருந்த நிலையில் இப்போது இந்த படம் ஓடிடிக்கு சென்றுள்ளது.

இது சம்மந்தமாக சில ஓடிடி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் நிலையில் விரைவில் எந்த ஓடிடியில் வெளியாகும் என்பது அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது.