வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 22 மே 2023 (23:20 IST)

’’தீராக் காதல்’’ பட கதாப்பாத்திரங்களை அறிமுகம் செய்த படக்குழு

theera kadhal
நடிகர் ஜெய் நடிப்பில் உருவாகியுள்ள தீராக் காதல் பட த்தின் கதாப்பாத்திரங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் ஜெய். இவர், சென்னை 28, சுப்ரமணியபுரம், புகழ், ராஜா ராணி, வாமனன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தற்போது, நடிகர் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷுடன் இணைந்து நடித்துள்ள படம் தீராக் காதல். ரோஹின் வெங்கடேஷ் இயக்கத்தில் நடித்துள்ள இப்படத்தை லைகா தயாரித்துள்ளது.

சித்துகுமார் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் முதல் சிங்கில் சில நாட்களுக்கு முன் வெளியானது.  இந்த   நிலையில், இப்படத்தின் டிரைலர்  சமீபத்தில் முன் வெளியான நிலையில், இது ரசிகர்களின் வரவேற்பை பெற்று 2 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைக் கடந்துள்ளது.

இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், இன்று இப்படத்தின் கதாப்பாத்திரங்களை இன்று படக்குழு அறிமுகம் செய்துள்ளது.

அதில்,

ஐஸ்வர்யா- ஆரண்யா
ஜெய்- கவுதம்
ஷிவனா- வந்தனா

விருத்தி விஷால்- ஆர்த்தி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளதாக  அறிவித்துள்ளது.

இப்படம் வரும் 26 ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.