அடுத்தடுத்து மூன்று படங்களைத் தயாரிக்கும் ஜி வி பிரகாஷ்!
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருந்த ஜி வி பிரகாஷ் குமார் திரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தின் மூலம் நடிகரானார். ஆரம்பத்தில் 18+ பிளஸ் படங்களில் நடித்து வந்த அவர் பின்னர் நல்ல கதையம்சம் உள்ள படங்களிலும் நடித்தார். ஆனால் அவரின் படங்கள் பெரிதாக வெற்றி பெறாத காரணத்தால், இப்போது நடிப்பு மற்றும் இசை என இரட்டைக் குதிரையில் சவாரி செய்கிறார். இடையில் அவர் மதயானைக் கூட்டம் என்ற படத்தையும் தயாரித்தார். அந்த படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக தோல்வி அடைந்தது.
இதனால் அவர் படங்கள் தயாரிப்பதை நிறுத்தி வைத்தார். இந்நிலையில் இப்போது அவர் முன்னணி ஓடிடி நிறுவனம் ஒன்றோடு இணைந்து அடுத்தடுத்து மூன்று படங்களைத் தயாரிக்க உள்ளாராம். விரைவில் இந்த படங்களுக்கான அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்பகிறது.