செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 25 நவம்பர் 2020 (17:01 IST)

நிவர் புயலில் சிக்கிய நடிகை… மெட்ரோ ரயிலில் பயணம்!

சென்னை நிவர் புயல் மழையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சிக்கி அதன் பின்னர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளார்.

சென்னையில் நிவர் புயல் காரணமாக கடுமையான மழை பெய்து கொண்டு இருக்கிறது. இதனால் தெரு முழுக்க வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் விமான நிலையம் செல்லும் வழியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டதால் மெட்ரோ ரயிலில் பயணம் செய்து விமான நிலையத்துக்கு சென்றுள்ளார்.

இது சம்மந்தமாக மெட்ரோ ரயிலில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு விமான நிலையம் செல்ல சிறந்த வழி மெட்ரோ ரயிலில் பயணம் செய்வதுதான்.