"நான் ஒரு ராணி" கவர்ச்சி உடையில் கலக்கல் வீடியோ!

Papiksha| Last Updated: வியாழன், 17 அக்டோபர் 2019 (12:54 IST)
கடந்த 2015ம் ஆண்டு நகுல் நடிப்பில் வெளியான தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா.  பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டவர் நடிகை  ஓவியா அதேபோல் இரண்டாவது சீசனில்  சில மோசமான காரியங்களால் ரசிகர்களிடம் அதிகம் திட்டுவாங்கி பிரபலமடைந்தவர் ஐஸ்வர்யா. 

 
பிக்பாஸ் சீசன் 2ல் இரண்டாம் இடத்தை பிடித்த ஐஸ்வர்யா கடைசியில் ரசிகர்கள் மனதில் முதலிடத்தை பிடித்தார். இந்நிகழ்ச்சிக்கு பிறகு மஹத்துடன்  ‘கெட்டவனு பேரெடுத்த நல்லவன்டா என்ற புது படத்திலும் நடிகர் ஆரியுடன் அலேக்கா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் பிக்பாஸில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். தற்போது ஐந்து படங்களுக்கு மேல் கைவசம் வைத்துக்கொண்டு பிஸியாக நடித்து வருகிறார்.  இப்படி பல படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் எதையாவது பதிவேற்றம் செய்து ஆக்டீவாக இருந்து வருகிறார். 
 
அந்தவகையில் தற்போது கவர்ச்சியான லாங் டிரஸ் ஒன்றை அணிந்துகொண்டு வீடியோ எடுத்து தனது ட்விட்டரில் " நான் ஒரு ராணி ஏனென்றால் என்னை எப்படி ஆளுவது என்று எனக்குத் தெரியும் என கூறி பதிவிட்டுள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :