1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 6 மே 2022 (00:28 IST)

மகளிருக்கு மாவட்ட இணை செயலாளர் பதவி கொடுத்து அழகு பார்த்த அதிமுக

admk
சோதனையில் சாதனை கண்ட மகளிருக்கு மாவட்ட இணை செயலாளர் பதவி கொடுத்து அழகு பார்த்த அதிமுக கட்சி – கரூர் மாவட்ட அதிமுக  இணை செயலாளராக பொறுப்பேற்றிருக்கும் கரூர் மல்லிகா சுப்பராயன்
 
தமிழக அளவில் தற்போது அரசியலில் கட்சியிலும் சரி, உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு கவுன்சிலர் முதல் மாநகராட்சி தலைவர் பதவி வரை சீட் கொடுக்கவில்லை என்றால் உடனே நகைச்சுவை நடிகர் வடிவேல் பாணியில் அகுக கட்சியிலிருந்து இகுக கட்சிக்கு மாறுவது வேடிக்கையான நிலையில், கடந்த 1980 முதல் இன்று வரை கட்சி தனக்கு சீட் கொடுக்கவில்லை என்றாலும் சரி இன்றும் அதிமுக தான் என்றும் மட்டுமில்லாமல், அதிமுக கட்சி எம்.ஜி.ஆர் மறைவிற்கு பின்பு ஜெயலலிதா அணி, ஜானகி அணி என்ற போதிலும் ஜெயலலிதா அணியிலும், கடந்த சில வருடங்களுக்கு பிறகு இரும்பு பெண்மணி செல்வி ஜெயலலிதா மறைவிற்கு பின்பும் அணி. அணியாக டிடிவி தினகரன் அணி, தீபா அணி என்றெல்லாம் செல்லாமல், இ.பி.எஸ், ஒபிஎஸ் அணியிலே இருந்து அப்போது கிளை செயலாளராக இருந்து தற்போது மாவட்ட இணை செயலாளராக அதிமுக கட்சியில் பதவி உயர்வு பெற்றுள்ள ஒரு பெண்ணின் உண்மை கதை தான் இது, அதுமட்டுமில்லாமல், கடந்த 1980 ல் சத்துணவு பணியிலிருந்த இவரை திமுக வினர் அதிமுக கட்சியிலிருந்து விலகி கொள்ள அட்வைஸ் செய்த போது, எனக்கு சத்துணவு அமைப்பாளர் பணியே வேண்டாம் என்றும், அதிமுக கட்சி தான் முக்கியம் என்று அதிமுக கட்சிக்காக தனது அரசுப்பணியே தூக்கி எறிந்த பெண்மணி தான் கரூர் மாவட்ட அதிமுக இணை செயலாளராக பொறுப்பேற்றிருக்கும் மல்லிகா சுப்பராயன்,
 
அண்ணா காலத்திலேயே திமுக கட்சியில் இருந்த சுப்பராயன் கடந்த 1967 ல் இருந்து வந்த நிலையில், திமுக கட்சியினை விட்டு எம்.ஜி.ஆர் பிரிந்த நிலையில், அண்ணா திராவிட முன்னேற்ற கழக கட்சியினை உருவாக்கிய போது எம்.ஜி.ஆருடன் சேர்ந்து வெளியேறியவர் தான் சுப்பராயன், அவரது மனைவி மல்லிகா, எம்.ஜி.ஆர் அவர்களின் திருக்கரங்களால் கடந்த 1982 ம் ஆண்டில் ஜூலை மாதம் கொண்டுவரப்பட்ட சத்துணவு திட்டத்தின் கீழ், சத்துணவு அமைப்பாளராக பணியாற்றினார். கரூர் மாவட்டம். அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நந்தனூர் பகுதியை சார்ந்த மல்லிகா சுப்பராயன், அதே பகுதியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றிய இவர், ஆரம்ப காலத்திலேயே எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் செயல்பாட்டின் காரணமாக அதிமுக கட்சியில் முழு நேரமாக இணைத்து கொண்டார். கடந்த 1992 ம் ஆண்டு கட்சிக்காக அந்த சத்துணவு அமைப்பாளர் பதவியே வேண்டாம் என்று தூக்கி எரிந்து விட்டு கட்சிக்காக முழு நேரமாக அதிமுக கட்சியில் களமிறங்கினார். கடந்த 1980 ம் ஆண்டு நந்தனூர் கிளை செயலாளர் பதவி வகித்த மல்லிகா, 1984 வரை தொடர்ந்து, 1989 ம் ஆண்டு, முதன்முதலாக அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு போட்டியிட விருப்ப மனு தெரிவித்து, நேர்காணலுக்கு சென்றவர், அதன் பின்னர் 1991 ம் ஆண்டு மீண்டும் ஆட்சி கவிழ்க்கப்பட்ட நிலையில், அதே ஆண்டும் அதே அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு விருப்ப மனு கொடுத்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நேர் பார்வையில் நேர்காணலில் சந்தித்தார். பின்பு 1998 ம் ஆண்டு ஜெயலலிதா அவர்களால் அறிவிக்கப்பட்ட 12 பொதுக்குழு உறுப்பினர்களில் இவர் தான் முதன்முதலில் பொதுக்குழுவில் தேர்வுபெற்றவர். இந்நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் மறைவிற்கு பின்பு ஜெ அணி, ஜா அணி என்ற நிலையிலும் ஜெ அணியிலேயே தன்னுடைய அரசியல் பிரவேசத்தினை மேற்கொண்டார். தமிழக அளவில் மறைந்த முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா, தமிழக அளவில் பொதுக்குழு உறுப்பினர்கள் 12 நபர்களை பெண்களை நியமிக்க வேண்டும் என்கின்ற போது, அதில் முதல் பெயர் பெற்றவரும் மல்லிகா சுப்பராயன், 
 
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களினால் நேர்காணல் நடைபெற்ற போது 1991 ம் ஆண்டே அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு போட்டியிட விருப்ப மனு கொடுத்து ஜெயலலிதா அவர்களே நேர்காணல் எடுத்தவர் இவர். கடந்த சட்டசபை பொதுத்தேர்தலின் போதும், அதற்கு முன்னர் நடைபெற்ற அரவக்குறிச்சி இடைத்தேர்தலிலும் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு போட்டியிட விருப்ப மனு கொடுத்து அன்றும் இ.பி.எஸ். ஒ.பி.எஸ் அவர்களால் நேர்க்காணல் செய்யப்பட்ட இவருக்கு சீட் மறுக்கப்பட்டது. அப்படி இருந்தும் கட்சியினை விட்டு விலகாமல் அதிமுக கட்சி என்னுடைய உயிர், என்று கூறி அப்போதைய போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் இருந்து கழகப்பணியாற்றியவர் இவர்,. 
 
அன்று அரவக்குறிச்சி ஒன்றிய அதிமுக மகளிரணி கொடுக்கப்பட்ட இவருக்கு 1996 ம் ஆண்டு திருச்சி மாவட்டத்திலிருந்து கரூர் மாவட்டம் தனியாக பிரிந்து தீரன் சின்னமலை மாவட்டமானது, கரூர் மாவட்டத்தில் தான் தற்போதைய முசிறி, தொட்டியமும் இணைக்கப்பட்டிருந்தது. அப்போது தொலைபேசி இல்லை, அலைபேசி இல்லை, இந்த நிலையில், அப்போது நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மல்லிகா சுப்பராயன் பெயர் அறிவிக்கப்பட்டும் அது மல்லிகா சின்னசாமி என்ற பெயராக மாற்றி ஒரு சிலர் சதி செய்துள்ளனர். 1996 ம் ஆண்டு மட்டும் இவருக்கு மாவட்ட மகளிரணி செயலாளர் பதவி கொடுத்து ஜெயலலிதா அவர்களே அழகு பார்த்துள்ளார். 1998 ம் ஆண்டு தலைமை செயற்குழு, 2001 ல் பொதுக்குழு ஆகியவற்றில் பணியாற்றிய நிலையில், இதுவரை அன்று முதல் இன்றுவரை 9 தடவை அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு போட்டியிட கட்சித்தலைமையில் விருப்ப மனுக்கள் கொடுத்தும், கரூர் எம்.பி தேர்தலில் 4 முறை விருப்ப மனுக்கள் கொடுத்தும், கரூர் நகராட்சியாக இருந்த போது 3 தடவை விருப்ப மனுக்கள் கொடுத்தும் இன்றும் அதிமுக கட்சி தான் எனக்கு உயிர் என்று உள்ள இந்த விருப்ப மனுக்களில் நேரடியாக கட்சி நிர்வாகிகளை சந்தித்தும் இன்றும் சீட் கொடுக்கவில்லை, அப்படி இருக்க கரூர் மாவட்ட அதிமுக கட்சியின் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்களின்  ஏற்பாட்டில் இந்த பெண்மணிக்கு கரூர் மாவட்ட இணை செயலாளர் பதவி கிடைத்துள்ளது. தமிழக எதிர்கட்சித்தலைவரும், முன்னாள் முதல்வரும், அதிமுக கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாட