திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: சனி, 3 ஜூலை 2021 (21:31 IST)

’அக்னி சிறகுகள்’ டப்பிங் பணியை முடித்தார் அருண்விஜய்!

’அக்னி சிறகுகள்’ டப்பிங் பணியை முடித்தார் அருண்விஜய்!
மூடர் கூடம் என்ற படத்தை இயக்கிய நவீன் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் அக்னிசிறகுகள். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
 
இந்த நிலையில் இந்த படத்தின் தனது பகுதிக்கான டப்பிங் பணியை அருண்விஜய் முடித்து விட்டதாக புகைப்படத்துடன் கூடிய தகவல் வெளிவந்துள்ளது. இதனை அடுத்து விரைவில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் கமல்ஹாசன் மகள் அக்ஷரா ஹாசன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
மூடர் கூடம்’ நவீன் இயக்கி வரும் இந்த படத்தில் விஜய் ஆண்டனி, அருண்விஜய், அக்சராஹாசன், ’அர்ஜுன் ரெட்டி’ நாயகி ஷாலினி பாண்டே, பிரகாஷ்ராஜ், நாசர், பிக்பாஸ் புகழ் மீராமிதுன், தலைவாசல் விஜய் உள்பட பலர் நடித்து வருகின்றனர். நடராஜன் சங்கரன் இசையமைக்கும் இந்த படத்திற்கு பாட்ஷா ஒளிப்பதிவும், கிருபாகரன் புருஷோத்தமன் படத்தொகுப்பு பணியும் செய்து வருகின்றனர்.