விரைவில் தமிழ் டப்பிங்கில் வருகிறதாம் தி பேமிலி மேன் 2!

Last Modified செவ்வாய், 8 ஜூன் 2021 (17:43 IST)

சர்ச்சைகளை கிளப்பிய பேமிலி மேன் 2 தொடர் விரைவில் தமிழ் டப்பிங்கிலும் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

’தி ஃபேமிலிமேன் 2’ தொடர் ஈழத்தமிழர்கள் தமிழக தமிழர்களின் உணர்வுகளை பெருமளவு புண்படுத்தி உள்ளது அதனால் இதைத் தடைசெய்ய வேண்டுமென சீமான் வைகோ உள்ளிட்டோர் மத்திய அரசை வலியுறுத்தினர். இத்தொடரில் பிரதான கேரக்டரில் நடித்துள்ள சமந்தாவுக்கு எதிர்ப்புகள் குவிந்தது. ஈழத்தமிழர்கள் தமிழக தமிழர்களின் உணர்வுகளை இந்த தொடர் பெருமளவு புண்படுத்தி உள்ளது என்று தமிழக அரசு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரருக்கு கடிதம் எழுதியது. ஈழத் தமிழர்களைத் தவறாக சித்தரித்துள்ளதாக பெரும் எதிர்ப்புகள் உருவான நிலையில் இந்த தொடர் வெளியாகிய பிறகு கலவையான
விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் ரிலீஸுக்குப் பின்னரும் மிகப்பெரிய அளவில் எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில் விரைவில் இந்த சீரிஸின் தமிழ் டப்பிங்கும் வெளியாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் இன்னும் அதிகமான தமிழ் ரசிகர்கள் மத்தியில் போய் சேரும் நிலை உருவாகியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :